இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் (எல்ஐசி ஆஃப் இந்தியா)
வரலாறு
246 தனியார் காப்பீட்டு நிறுவனங்களை இணைத்து நாட்டுடைமையாக்கி 1956 செப்டம்பர் 1 ஆம் நாள் உருவாக்கப்பட்ட ஆயுள் காப்பிட்டு நிறுவனமான இது 2015 ஆம் ஆண்டு வைரவிழாவினைக் கொண்டாடியது.
பரந்த அளவிலான காப்பீட்டுத் தயாரிப்புகள் மற்றும் சேவைகளுடன், எல்ஐசி ஆறு தசாப்தங்களுக்கும் மேலாக நாடு முழுவதும் மில்லியன் கணக்கான தனிநபர்கள் மற்றும் குடும்பங்களுக்கு காப்பீட்டுத் தொகையை வழங்கியுள்ளது.
₹ 1560481.84 கோடி (US $ 260 பில்லியன்) சொத்து மதிப்புடன் இந்தியாவின் பெரிய காப்பீட்டு நிறுவனமாக திகழ்கிறது .
ஒருவரின் வருமானத்தில் 8% முதல் 10% வரை ஆயுள் காப்பீடுக்காக ஒதுக்குவது பொதுவாக நிபுணர்களால் பரிந்துரைக்கப்படுகிறது.
இந்தியாவில் 2000 ஆண்டுக்குப் பிறகு இந்நிறுவனத்திற்கு போட்டியாக பல ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள் உருவாகி உள்ளன. இருப்பினும், ஒவ்வொரு ஆண்டும், இந்நிறுவனத்தின் 10% வளர்ச்சியை எட்டுவதாக அதன் இணையத்தள புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
இந்திய மக்கள்தொகையான 130 கோடியில், சுமார் 30% நபர்கள் மட்டுமே ஆயுள் காப்பீடு செய்துள்ளனர். இந்தியாவின் மொத்த காப்பீட்டு வர்த்தகத்தில், 75 சதவீத இடத்தை, இந்நிறுவனம் தக்கவைத்துக் கொண்டிருக்கிறது.
வகைகள்
இந்திய மக்களில் பலர் இந்நிறுவனத்தின் எண்டோமென்ட், முழுஆயுள், மணிபேக், டெர்ம் அஷ்யூரன்ஸ், பென்ஷன், யூலிப், மைக்ரோ மற்றும் உடல்நல திட்டங்கள் போன்றவைகளில் அதிக முதலீடு செய்துள்ளனர். சாமான்ய மக்களுக்கென குறைந்த பிரீமியத்தில் பாலிசியாக, மைக்ரோத் திட்டம் செயல் படுத்தப் படுகிறது. இந்த திட்டத்தின் சந்தா வரம்புகள், பல அடுக்குகளாகப் பிரிக்கப்பட்டு, சாதரண மக்கள் கட்டும் வகையில் உள்ளன. இதனால் பொருளாதாரத்தில் ஏழைகளாகக் கருதப்படும் மக்களும் செலுத்தக் கூடிய வகையில், மிகவும் குறைவானத் தொகையை கொண்டது ஆகும்.